ஹூண்டாய் நிறுவனம், தனது மைக்ரோ எஸ் யூ வி மாடலான எக்ஸ்டர் வாகனத்தை, இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வாகனத்தின் விலை 5.99 முதல் 9.31 லட்சம் வரை இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த வாகனம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பன்ச் வாகனத்துக்கு நேரடி போட்டியாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எக்ஸ்டர் வாகனத்தின் சி என் ஜி வெர்ஷனும் இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது. சி என் ஜி மாடல் விலை 8.23 லட்சமாக சொல்லப்பட்டுள்ளது.
எக்ஸ்டர் வாகனத்தை வெளியிட்டு பேசிய ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைமை செயல் அதிகாரி அன்சு கிம், "இந்த வாகனத்தின் தயாரிப்புக்காக 950 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இந்தியாவில் இது எங்கள் 8வது எஸ்யூவி மாடல் ஆகும். இதில், எலக்ட்ரிக் சன் ரூஃப், 6 ஏர் பேக்குகள், டூயல் கேமரா உள்ளிட்ட பல்வேறு நவீன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன” என்று கூறினார்.