திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து ஏழுமலையான் கோவிலுக்கு செல்ல தனியார் வாகனங்கள் இயக்கப்படுகின்றன. அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மேலும் வெளியூர் பக்தர்களிடம் வாடகை வாகனங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். அப்போது இதனை தடுக்க ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ப்ரீபெய்டு கார் சேவை தொடங்க சாத்திய கூறுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து திருப்பதி மலையில் பக்தர்கள் வசதிக்காக ப்ரீபெய்டு கார் சேவை தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.