அமெரிக்க டாலரின் பயன்பாட்டை குறைக்கும் வகையில், இந்தியா - வங்காளதேசம் இடையே டாலருக்கு மாற்றாக இந்திய ரூபாயில் வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
வங்காளதேசத்தின் மத்திய வங்கி ஆளுநர் அப்துல் ரவூப் தலுக்தர், இதுகுறித்து, "வங்கதேசத்தின் டாகா மற்றும் இந்தியாவின் ரூபாய் ஆகியவற்றின் பரிமாற்றத்தின் அடிப்படையில் வர்த்தகம் தொடங்கப்பட்டுள்ளது. இது நீண்ட வர்த்தகப் பயணத்தின் முதல் அடி ஆகும். இதன் மூலம், இந்தியாவுடனான வர்த்தகச் செலவுகள் பெருமளவு குறையும். செப்டம்பர் மாதம் முதல் இந்த வர்த்தக முறை முழு வீச்சில் நடைமுறைப்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார். மேலும், ரூபாய் அடிப்படையிலான வர்த்தகத்திற்காக, இந்தியா மற்றும் வங்காளதேச வங்கிகளில் நோஸ்ட்ரா கணக்குகள் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.