ஈரானை அச்சுறுத்த எஃப்-16 போர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா

July 15, 2023

இவ்வார இறுதியில் ஈரானை அச்சுறுத்த எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது. பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியமான பாதையாக கருதப்படுகிறது. இப்பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதனை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது. […]

இவ்வார இறுதியில் ஈரானை அச்சுறுத்த எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களை அமெரிக்கா அனுப்பவுள்ளது.

பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் வளைகுடாவிற்கும் இடையில் உள்ளது ஹார்முஸ் ஜலசந்தி. பாரசீக வளைகுடாவின் பல துறைமுகங்களிலிருந்து எண்ணெய் கொண்டு செல்லும் மிகப்பெரிய கப்பல்கள் இந்த ஜலசந்தி வழியாகத்தான் செல்ல வேண்டும். இதனால் பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் முக்கியமான பாதையாக கருதப்படுகிறது. இப்பகுதியில் தன் அதிகாரத்தை நிலைநாட்ட ஈரான் முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதனை அமெரிக்கா தீவிரமாக எதிர்த்து வருகிறது.

ஈரான், எண்ணெய் கப்பல்களை கைப்பற்றுவதையோ சேதம் விளைவிப்பதையோ தடுக்க ஹார்முஸ் ஜலசந்தியை சுற்றி போர் விமானங்களை அனுப்பி அமெரிக்கா பாதுகாத்து வருகிறது. கடந்த வாரம் இந்த ஜலசந்தி அருகே 2 எண்ணெய் கப்பல்களை ஈரான் கைப்பற்ற முயன்றது. ஒரு கப்பலின் மீது துப்பாக்கி சூடும் நடத்தியது. தற்போது வளைகுடா பகுதியில் ஒரு வாரத்திற்கும் மேலாக ஏ-10 (A-10) ரக தாக்குதல் விமானங்கள் ரோந்து வருகின்றன. இவற்றிற்கு வலு சேர்க்கும் விதமாக இவ்வார இறுதியில் எஃப்-16 (F-16) ரக ஜெட் விமானங்களையும் அமெரிக்கா அனுப்பவுள்ளது. எஃப்-16 விமானங்கள் ஈரானின் முயற்சிகளுக்கு தடையாக, நீர்வழி பாதையில் செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu