இன்று ஒரே நாளில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளின் சந்திப்பு நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஆளும் பாஜக கட்சியின் கூட்டணிகளும், பெங்களூருவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி சந்திப்பும் நிகழ்கின்றன. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இரண்டாகப் பிளவு பட்டுள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எந்தக் கூட்டணியில் இணையும் என்ற கேள்வி எழுந்தது. தற்போது, சரத் பவர் பெங்களூருவுக்கும் அஜித் பவர் டெல்லிக்கும் சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரண்டு பிரிவு தலைவர்களும் வெவ்வேறு கூட்டணி சந்திப்புகளுக்கு சென்றுள்ளதால் குழப்பம் மேலும் அதிகரித்துள்ளது. பெங்களூருவில் நேற்று தொடங்கிய எதிர்க்கட்சிகளின் முதல் நாள் சந்திப்பில் சரத் பவர் பங்கேற்கவில்லை. ஆனால், இன்று அவர் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.