மெட்டா நிறுவனம் ஸ்மார்ட் வாட்ச்சில் இயங்கும் படியான பிரத்தியேக வாட்ஸ் அப் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இது கூகுள் நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச்களில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இனிமேல், வாட்ஸ் அப் அழைப்புகளை ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஏற்க முடியும்.
மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க், நேற்று வாட்ஸ் அப் ஸ்மார்ட் வாட்ச் செயலி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், ஸ்மார்ட் வாட்ச் மூலமாகவே, வாட்ஸ் அப் உரையாடலை தொடங்குதல், வாட்ஸ் அப் சாட்டில் பதில் அளித்தல், வாட்ஸ் அப் அழைப்புகளை ஏற்று உரையாடுதல், போன்றவற்றை மேற்கொள்ள முடியும் என்று கூறியுள்ளார். கூகுள் வியர் ஓஎஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் மட்டுமே இந்த செயலி இயங்கும் எனவும், ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்களில் பல கட்டுப்பாடுகள் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.













