செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக, நாசா, பர்சீவரென்ஸ் ரோவரை அனுப்பியுள்ளது. இந்த ரோவர் தற்போது செவ்வாய் கிரகத்தில் பலதரப்பட்ட உயிரி பொருட்களை கண்டுபிடித்துள்ளது. உலகில், உயிர்கள் தோன்றுவதற்கு உயிரி பொருட்களே ஆதாரமாக அமைந்தன. அந்த வகையில், செவ்வாய் கிரகத்தில் உயிரி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், விஞ்ஞானிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெசிரோ கிரேட்டர் பகுதியில், இந்த உயிரி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘செவ்வாய் கிரகத்தில் கார்பன் சைக்கிள் இயக்கம்’ குறித்து விரிவாக அறிய முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விரிவான ஆய்வு அறிக்கை நேச்சர் என்ற ஆய்வு இதழில் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் கூற்றுப்படி, இந்த உயிரி பொருட்கள், நீர் மற்றும் தூசி பொருட்கள் ஆகியவற்றின் கூட்டமைப்பில் உருவாகி இருக்கலாம். அல்லது, வெளியிலிருந்து செவ்வாய் கிரகத்திற்குள் விழுந்த எரிகல் போன்றவற்றின் மூலமாக இருக்கலாம்.