எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக வாக்களித்த டிவிட்டர் பங்குதாரர்கள்

September 13, 2022

ட்விட்டர் நிறுவனத்தின் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை, எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வது குறித்து நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் வாக்குப் பதிவு நடைபெற்றது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடையும் வாக்குப்பதிவில், எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளன. நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்தத் தகள் வெளிவந்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை. ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் பங்குச்சந்தை பைலிங்கில் […]

ட்விட்டர் நிறுவனத்தின் 44 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை, எலான் மஸ்க்கிற்கு விற்பனை செய்வது குறித்து நிறுவனத்தின் பங்குதாரர்களிடம் வாக்குப் பதிவு நடைபெற்றது. செப்டம்பர் 13ம் தேதியுடன் நிறைவடையும் வாக்குப்பதிவில், எலான் மஸ்க்கிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் பதிவாகியுள்ளன. நம்பத் தகுந்த வட்டாரங்கள் மூலம் இந்தத் தகள் வெளிவந்துள்ளது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

ட்விட்டர் நிறுவனத்தில் உள்ள ஒவ்வொரு பங்கையும் 54.20 டாலருக்கு வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் பங்குச்சந்தை பைலிங்கில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனத்துக்கும், எலான் மஸ்கிற்கும் ஒப்பந்தம் கையொப்பமானது. ட்விட்டர் நிறுவனத்தில் ஏராளமான போலிக் கணக்குகள் இருப்பதால், அதுதொடர்பாக தகவல்கள் தேவை என்று எலான் மஸ்க் கோரியிருந்தார். ஆனால் ட்விட்டர் நிறுவனம் அது குறித்த விவரங்களை வழங்கவில்லை. இதனை ஒப்பந்தத்தை மீறிய செயல் எனக் கூறி, அவர், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் தனது முடிவை ஒத்திவைப்பதாகத் தெரிவித்தார்.

அதே வேளையில், நிறுவனத்தை வாங்குவதாகச் சொல்லிவிட்டு, வாங்காமல் இழுத்து அடித்ததால், எலான் மஸ்க் ஒப்பந்தத்தை மீறியதாக ட்விட்டர் தரப்பு கூறுகிறது. இவ்வாறு இரு தரப்பும் மோதிக் கொள்ளும் நிலையில், இது தொடர்பான நீதிமன்ற வழக்கு அடுத்த வாரம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu