ஸ்வீடன் தூதர் நாட்டை விட்டு வெளியேற ஈராக் உத்தரவு

July 21, 2023

அண்மையில், ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஈராக் நாடு, தங்கள் நாட்டில் உள்ள ஸ்வீடன் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்வீடனில் உள்ள தங்கள் நாட்டு தூதரை ஈராக்கிற்கு திரும்பி வர கூறியுள்ளது. ஸ்வீடன் நாட்டில் மத நிந்தனை தடை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது, மதக் […]

அண்மையில், ஸ்வீடன் நாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆன் எரிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர்களும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஈராக் நாடு, தங்கள் நாட்டில் உள்ள ஸ்வீடன் தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஸ்வீடனில் உள்ள தங்கள் நாட்டு தூதரை ஈராக்கிற்கு திரும்பி வர கூறியுள்ளது.

ஸ்வீடன் நாட்டில் மத நிந்தனை தடை சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு நடைபெறும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களின் போது, மதக் கொள்கைகளுக்கு எதிரான செயல்களை மேற்கொள்ள அனுமதி உண்டு. அதன்படி, திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு ஸ்வீடன் அதிகாரிகளின் அனுமதி கிடைத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், ஸ்வீடனை எதிர்க்கும் நோக்கில், நேற்று பாக்தாத்தில் உள்ள ஸ்வீடன் தூதரகம் தீ வைத்து எரிக்கப்பட்டது. ஆனாலும், ஸ்வீடன் நாட்டில் திருக்குர்ஆன் அவமதிப்புகள் தொடர்கின்றன. மேலும், இத்தகைய நிகழ்வுகளைத் தடுக்க தவறிய அதிகாரிகளே இதற்கு பொறுப்பு என ஈராக் தெரிவித்துள்ளது. மேலும், ஸ்வீடன் தனது நிலைப்பாட்டை மாற்றாத பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவு முழுமையாக துண்டிக்கப்படும் என ஈராக் பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu