எஸ்பிரசோ மற்றும் ஈகோ வாகனங்கள் திரும்பப் பெறப்படுகிறது - மாருதி சுசுகி

July 25, 2023

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, 87599 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. ஸ்டீரிங் குறைபாடுகள் காரணமாக இந்த வாகனங்கள் பெறப்படுவதாக பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்பிரசோ மற்றும் ஈகோ மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன. கடந்த 2021 ஜூலை 5ஆம் தேதி மற்றும் 2023 பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட எஸ்பிரசோ மற்றும் ஈகோ மாடல் கார்களில் ஸ்டீரிங் குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை களையவே, இந்த வாகனங்கள் திரும்ப […]

இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசுகி, 87599 வாகனங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. ஸ்டீரிங் குறைபாடுகள் காரணமாக இந்த வாகனங்கள் பெறப்படுவதாக பங்குச்சந்தையில் சமர்ப்பிக்கப்பட்ட குறிப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எஸ்பிரசோ மற்றும் ஈகோ மாடல்கள் திரும்பப் பெறப்படுகின்றன.

கடந்த 2021 ஜூலை 5ஆம் தேதி மற்றும் 2023 பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் உற்பத்தி செய்யப்பட்ட எஸ்பிரசோ மற்றும் ஈகோ மாடல் கார்களில் ஸ்டீரிங் குறைபாடுகள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. அதனை களையவே, இந்த வாகனங்கள் திரும்ப பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து டீலர்களுக்கு உரிய தகவல் அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu