இந்திய பங்குச் சந்தையில் முக்கிய 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு கடும் சரிவு

கடந்த வார இறுதியில், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்து இருந்தது. அப்போது, பங்குச்சந்தை பட்டியலின் முதல் 10 நிறுவனங்களில், 7 நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்திருந்தன. குறிப்பிட்ட அந்த 7 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 77434.98 கோடி அளவில் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, ஐடிசி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் கடும் சரிவை பதிவு செய்துள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, […]

கடந்த வார இறுதியில், இந்திய பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்து இருந்தது. அப்போது, பங்குச்சந்தை பட்டியலின் முதல் 10 நிறுவனங்களில், 7 நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்திருந்தன. குறிப்பிட்ட அந்த 7 நிறுவனங்களின் ஒருங்கிணைந்த சந்தை மதிப்பு 77434.98 கோடி அளவில் சரிவடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, ஐடிசி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி பங்குகள் கடும் சரிவை பதிவு செய்துள்ளன.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்சி சர்வீஸ், ஐ சி ஐ சி ஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் ஐடிசி ஆகிய 7 நிறுவனங்கள் பங்குச்சந்தை பட்டியலில் பின்தங்கி உள்ளன. ஐடிசி மதிப்பு 583732.19 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கி சந்தை மதிப்பு 1240322.63 கோடியாகவும் பதிவாகி உள்ளன. மேலும், பஜாஜ் பைனான்ஸ் சந்தை மூலதனம் 447298.52 கோடி ஆகவும், ரிலையன்ஸ் சந்தை மதிப்பு 1710076.74 கோடியாகவும் டிசிஎஸ் மதிப்பு 1227739.8 கோடி ஆகவும் உள்ளன. அத்துடன், ஹிந்துஸ்தான் யூனிலிவர் 607369.34 கோடி ஆகவும் ஐ சி ஐ சி ஐ வங்கி 696495.74 கோடியாகவும் உள்ளன. பங்குச்சந்தை பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள மற்ற 3 நிறுவனங்களான இன்போசிஸ், ஏர்டெல் மற்றும் எஸ்பிஐ ஆகியவற்றின் சந்தை மதிப்பு கடந்த வாரம் உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu