தங்கும் விடுதிகளுக்கு 12% ஜிஎஸ்டி - இணையத்தில் வலுக்கும் எதிர்ப்புகள்

தங்கும் விடுதிகளுக்கு செலுத்தப்படும் வாடகை கட்டணத்திற்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்கூட்டிய வரி தீர்ப்பாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் அல்லது வாடகை உயர உள்ளது. எனவே, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இணையம் வாயிலாக பல்வேறு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. முன்கூட்டிய வரி தீர்ப்பாணையம் வெளியிட்டுள்ள அறிகையின் படி, "வீடுகள் மட்டுமே ஜிஎஸ்டி வரி விலக்குக்கு தகுதி பெறுகின்றன; விடுதிகள் வீடுகளாக […]

தங்கும் விடுதிகளுக்கு செலுத்தப்படும் வாடகை கட்டணத்திற்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் முன்கூட்டிய வரி தீர்ப்பாணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக, தங்கும் விடுதிகளுக்கான கட்டணம் அல்லது வாடகை உயர உள்ளது. எனவே, பொதுமக்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இணையம் வாயிலாக பல்வேறு எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

முன்கூட்டிய வரி தீர்ப்பாணையம் வெளியிட்டுள்ள அறிகையின் படி, "வீடுகள் மட்டுமே ஜிஎஸ்டி வரி விலக்குக்கு தகுதி பெறுகின்றன; விடுதிகள் வீடுகளாக கருதப்படாது என்பதால், அதற்கு வரி உண்டு. விடுதிகளில் தனியாக சமையலறை இல்லை என்பதும், சமைப்பதற்கு அனுமதி கிடையாது என்பதும், அதனை ஒரு வீடு என்பதாக கருதுவதற்கு இடமளிக்கவில்லை. எனவே, விடுதிகள் ஜிஎஸ்டி வரி விலக்குக்கு தகுதி பெறவில்லை" என கூறியுள்ளது. இந்த அறிவிப்பால், கல்வி மற்றும் வேலை காரணமாக விடுதிகளில் தங்கும் இளம் தலைமுறையினர் பெரிதும் பாதிக்கப்படுவர் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu