சந்திரயான் 3 புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்தது - இஸ்ரோ

August 1, 2023

சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் […]

சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கடந்த 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது. இந்த நீள்வட்ட சுற்றுப்பாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை நேற்று நள்ளிரவு நிறைவு செய்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான் 3 விண்கலம் சுற்றி வருகிறது. பின்னர் நிலவின் மேற்பரப்பில் ஆகஸ்ட் 23 அல்லது 24 அன்று விண்கலம் தரையிறங்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu