டெல்டா பாசனத்திற்கு 20 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும்

August 2, 2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் டெல்டா பாசனத்திற்கு 20 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும். ஜூன், ஜூலை மாதங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து தமிழகத்திற்கு 23,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. மேட்டூர் அணையின் மூலம் 12 மாவட்டங்களுக்கு பாசன […]

மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் டெல்டா பாசனத்திற்கு 20 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்படும்.

ஜூன், ஜூலை மாதங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த கன மழையின் காரணமாக மேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரித்து தமிழகத்திற்கு 23,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது.

மேட்டூர் அணையின் மூலம் 12 மாவட்டங்களுக்கு பாசன வசதிக்காக நீர் திறக்கப்பட்டு வருகின்றது. ஜூன் 12ம் தேதி முதல் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டு வருகிறது.இதனை அடுத்து டெல்டா பகுதிகளுக்கு கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டு வந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் 20 நாட்களுக்கு மட்டுமே டெல்டா பகுதிகளுக்கு நீர் திறந்து விடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu