ஹரியானா கலவரம் இரண்டு மாவட்டங்களில் குவிந்த போலீசார்!

August 2, 2023

ஹரியானாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது,இந்த ஊர்வலத்தில் திடீரென கல்விச்சு, வாகனங்களை கொளுத்துதல், துப்பாக்கி சூடு என இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள் உட்பட 2500 பேர் அருகில் உள்ள கோயில் ஒன்றில் பஞ்சம் புகுந்தனர். வன்முறையை தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

ஹரியானாவில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு வன்முறை வெடித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் விஸ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலம் நடந்தது,இந்த ஊர்வலத்தில் திடீரென கல்விச்சு, வாகனங்களை கொளுத்துதல், துப்பாக்கி சூடு என இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்த வன்முறையில் இருந்து தப்பிப்பதற்காக குழந்தைகள் உட்பட 2500 பேர் அருகில் உள்ள கோயில் ஒன்றில் பஞ்சம் புகுந்தனர். வன்முறையை தடுக்க சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்டம் முழுதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் அங்கு இணைய சேவை ஆகஸ்ட் 2 வரை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
வன்முறையில் முஸ்லிம் சமூகத்தினருக்கான வாகனங்கள், கடைகள் மற்றும் மசூதிகள் தீவைக்கப்பட்டன. இதனை கண்டித்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வன்முறையின் இதுவரை இரண்டு போலீசார் மற்றும் பொதுமக்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 70 கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 20 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu