தமிழக துறைமுகங்களுக்கு ஒன்றாம் எண் புயல் கூண்டு எச்சரிக்கை

August 2, 2023

தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் மத்திய பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்குவங்க மாநில திகாவில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கே நிலைபெற்றுள்ளது. இது வங்கதேசத்தில் கேபுபரா கடற்கரை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. இதில் மிக கனமழை பகுதியாக மேற்குவங்கம், ஜார்கண்ட், நாகலாந்து, […]

தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதால் ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மத்திய பகுதியில் ஏற்பட்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்குவங்க மாநில திகாவில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கே நிலைபெற்றுள்ளது. இது வங்கதேசத்தில் கேபுபரா கடற்கரை அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதில் மிக கனமழை பகுதியாக மேற்குவங்கம், ஜார்கண்ட், நாகலாந்து, ஒடிசா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களையும், கனமழை பகுதியாக உத்தரகாண்ட், சட்டீஸ்கர், பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களையும் வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக துறைமுகங்களான பாம்பன், தூத்துக்குடி, குளச்சல், நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காட்டுப்பள்ளி, சென்னை, எக்மோர் மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu