துனிசியாவில் முதல் பெண் பிரதமர் திடீர் பதவி நீக்கம்

August 2, 2023

துனிசியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த நஜ்லா பவுடன் ரோம்தனே எந்த வித அறிவிப்பும் இன்றி திடீர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நஜிலா பவுடன் ரோம்தனே என்ற 64 வயதான பெண் வடக்கு ஆப்பிரிக்கா நாடான துனேசியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் புவியியல் பேராசிரியராக துனேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். மேலும் பிரான்ஸ் நாட்டின் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். […]

துனிசியாவின் முதல் பெண் பிரதமராக இருந்த நஜ்லா பவுடன் ரோம்தனே எந்த வித அறிவிப்பும் இன்றி திடீர் பதவி நீக்கம்
செய்யப்பட்டுள்ளார்.

நஜிலா பவுடன் ரோம்தனே என்ற 64 வயதான பெண் வடக்கு ஆப்பிரிக்கா நாடான துனேசியாவின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் பதவியில் நியமிக்கப்பட்டார். இவர் புவியியல் பேராசிரியராக துனேசியா தேசிய பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்தார். மேலும் பிரான்ஸ் நாட்டின் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். மேலும் கல்வி பேரிடர் போன்றவற்றில் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை ஆற்றினார். மேலும் இவர் துனிசியாவில் முதல் பிரதமர் என்ற பெருமையுடன் அரசை வழிநடத்தி வந்தார்.

தற்போது துனிசியாவின் புதிய பிரதமராக அக்மத் ஹச்சாணி யை அந்நாட்டு அதிபர் நியமித்ததுடன் நஜிலா பவுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சுமார் 1 3/4 ஆண்டுகள் பிரதமர் பதவி வகித்து வந்தார். நேற்று திடீரென பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் இந்த நாட்டு அதிபர் வெளி விவகாரம் மந்திரி உட்பட பல மந்திரிகளை பதவி நீக்கம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu