ஹரியானா வன்முறையின் போது விடுப்பில் இருந்த நூஹ் காவல்துறைத் தலைவர் வருண் சிங்லா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஹரியானாவின் நூஹ் பகுதியில் திங்களன்று விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியின் போது வகுப்புவாத மோதல்கள் வெடித்தது. அந்த மோதல் கலவரமாக மாறியதில் இதுவரை 6 பேர் பலியாகினர். கொல்லப்பட்டனர். கலவரம் அருகில் உள்ள குருகிராம் மாவட்டத்துக்கும் பரவியது. அங்கு வீடுகள், வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. நூ மற்றும் குருகிராம் மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கலவரத்தின்போது விடுப்பில் இருந்த நூஹ்வின் காவல்துறைத் தலைவர் வருண் சிங்லா, பிவானி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். அது நூஹ் பகுதியில் இருந்து 160 கிமீ தொலைவில் உள்ளது. வன்முறை தொடங்கியதில் இருந்து காவல்துறை கண்காணிப்பாளராக ஐபிஎஸ் அதிகாரி நரேந்திர பிஜர்னியா செயல்பட்டார். அவர் பிப்ரவரி 2020 முதல் அக்டோபர் 2021 வரை நுஹ் மாவட்டத்தில் காவல் துறைக்கு தலைமை தாங்கியவர் ஆவார். சிங்லா இல்லாத நிலையில் மோதல்களின்போது நரேந்திர பிஜர்னியா பிவானியில் இருந்து நூஹ்வுக்கு விரைந்தார். இவர்தான் மோதல்கள் வெடித்தபோது விடுப்பில் இருந்த வருண் சிங்லாவை மாற்றியுள்ளார்.














