சீனாவுடன் ரகசிய தகவல்களைப் பகிர்ந்த 2 அமெரிக்க கடற்படை வீரர்கள் கைது

August 4, 2023

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் போர்க்கப்பல்கள் மற்றும் அவற்றின் ஆயுத அமைப்புகளுக்கான கையேடுகள், ராடார் அமைப்புக்கான வரைபடங்கள், அமெரிக்க இராணுவப் பயிற்சிக்கான திட்டங்களை உள்ளடக்கிய இரகசிய தகவல்களை பெய்ஜிங்கிற்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். சான் டியாகோவில் உள்ள யுஎஸ்எஸ் எசெக்ஸ் என்ற ஆம்பிபியஸ் தாக்குதல் கப்பலில் பணியாற்றிய மாலுமி ஜிஞ்சாவோ வெய், (வயது 22) கப்பல்கள் மற்றும் அவற்றின் அமைப்புகளை விவரிக்கும் டஜன் கணக்கான ஆவணங்கள், […]

சீனாவுக்காக உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் போர்க்கப்பல்கள் மற்றும் அவற்றின் ஆயுத அமைப்புகளுக்கான கையேடுகள், ராடார் அமைப்புக்கான வரைபடங்கள், அமெரிக்க இராணுவப் பயிற்சிக்கான திட்டங்களை உள்ளடக்கிய இரகசிய தகவல்களை பெய்ஜிங்கிற்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

சான் டியாகோவில் உள்ள யுஎஸ்எஸ் எசெக்ஸ் என்ற ஆம்பிபியஸ் தாக்குதல் கப்பலில் பணியாற்றிய மாலுமி ஜிஞ்சாவோ வெய், (வயது 22) கப்பல்கள் மற்றும் அவற்றின் அமைப்புகளை விவரிக்கும் டஜன் கணக்கான ஆவணங்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சீனாவிடம் ஒப்படைத்துள்ளார். இதில் அவரது கப்பலின் ஆயுதங்களைக் கையாளும் தொழில்நுட்ப மற்றும் இயந்திர கையேடுகள் அடங்கும். இந்த தகவலுக்காக ஆயிரக்கணக்கான டாலர்கள் இவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு வென்ஹெங் ஜாவோ ( வயது 26), என்ற மாலுமி லாஸ் ஏஞ்சல்ஸுக்கு வடக்கே உள்ள கடற்படைத் தள வென்ச்சுரா கவுண்டியில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சீனாவுக்காக உளவு பார்த்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் பெரிய அளவிலான அமெரிக்க இராணுவப் பயிற்சியைப் பற்றிய தகவலுக்காக ஜாவோவுக்கு சீன உளவுத்துறை 15,000 டாலர்கள் கொடுத்துள்ளது என தெரிகிறது. தெற்கு ஜப்பானில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தில் ரேடார் அமைப்பிற்கான மின் வரைபடங்களை அவர் ஒப்படைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கடுமையாக பாதிக்கக்கூடிய முக்கியமான இராணுவ தகவல்களை பாதுகாப்பதற்காக பணியாளர்களை சீனா விலைக்கு வாங்கியுள்ளது என அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu