ஆப்பிரிக்கா நாடான நைஜரில் இராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில் அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஜனநாயக ஆட்சி கலைக்கப்பட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் நைஜர் மக்களுக்கு துன்பங்களை ஏற்படுத்துபவர்கள், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக தோற்கடிக்க அனைத்து மக்களையும் ஒற்றுமைக்காக அழைக்கிறோம். எங்களது உள்நாட்டு விவகாரங்களில் அண்டை நாடுகள், சர்வதேச சமூகம் தலையிட வேண்டாம். தேர்தலுக்கான அமைதியான சூழ்நிலை உருவாகும் என்று ராணுவ ஜெனரல் அப்துல் ரஹ்மானே டிசியானி கூறியுள்ளார். இதன் அண்டை நாடான நைஜீரியா நைஜருக்கு மின் விநியோகத்தை தடை செய்துள்ளது.














