தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் பா.ஜ.க . வேட்பாளர் பட்டியல் வெளியீடு

August 4, 2023

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் மும்முனை போட்டியாக நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ள இதில் பெரும்பான்மை ஆட்சி பெற 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும். இந்த மூன்று […]

தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

தெலுங்கானாவில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் மும்முனை போட்டியாக நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் மொத்தம் 119 சட்டசபை தொகுதிகள் உள்ள இதில் பெரும்பான்மை ஆட்சி பெற 60 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

இந்த மூன்று கட்சிகளும் ஆட்சியைப் பிடிப்பதில் தீவிரமாக வியூகம் அமைத்து வருகின்றது. தெலுங்கானாவில் நடந்த அனைத்து இடைத்தேர்தல்களையும் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளதால் இம்முறை ஆளும் கட்சி மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தெலுங்கானாவை கைப்பற்ற தீவிரமாக இருந்து வரும் பா.ஜ.க. தெலுங்கானா மாநில தலைவராக இருந்த பண்டி சஞ்சய்க்கு பதில் மத்திய இணை மந்திரி கிஷன் ரெட்டியை தெலுங்கானா மாநில தலைவராக மாற்றியது. இதனை தொடர்ந்து ஆகர்ஷ் தெலுங்கானா என்னும் அடுத்த திட்டத்தின் மூலம் முக்கிய பிரபலங்களை பா.ஜ.க.வுடன் இணைக்கும் படலத்தை மேற்கொண்டுள்ளது. இதில் தான் நடிகை ஜெயசுதாவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். தற்போது 30 தொகுதிகளுக்கு பா.ஜ.க. தனது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மூத்த நடிகை விஜயசாந்தி, நடிகை ஜெயசுதா ஆகிய 30 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. தெலுங்கானா தேர்தலில் பா.ஜ.க.வின் இலக்கு 'டார்கெட் 75' இதில் பா.ஜ.க. 75 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என போட்டியிட்டு வருகின்றனர். இரண்டாம் கட்டமாக 45 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu