தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் டெக் நிறுவனம், வெரிசோன் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இந்த தகவல் இன்று வெளியானதில் இருந்து, இந்திய பங்குச் சந்தையில், ஹெச் சி எல் டெக் நிறுவனத்தின் பங்குகள் 5% வரை உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
வெரிசோன் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்ததன் மூலம், சர்வதேச அரங்கில் ஹெச் சி எல் டெக் முக்கிய உயரத்தை அடைந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி, வெரிசோன் நிறுவனம், விற்பனை, தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் செயல்பாடுகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விற்பனைக்கு பிறகான தேவைகள் மற்றும் ஒத்துழைப்புகளை ஹெச் சி எல் டெக் நிறுவனம் மேற்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.