7 பில்லியன் டாலர்கள் வித்தியாசத்தில் உலகின் இரண்டாவது பணக்காரரான ஜெஃப் பெசோஸின் இடத்தை பிடிப்பார் கெளதம் அதானி

September 15, 2022

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு சமீபத்தில் உயர்ந்துள்ளது. அதாவது அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பை அடைய 7 பில்லியன் டாலர்கள் மட்டுமே குறைவாக இருக்கிறார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி, அமெசானின் தலைவ௫ம் நிர்வாக அதிகாரியுமான பெசோஸ் 152 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே சமயம் அதானி 145 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பில் 3வது இடத்தில் உள்ளார். பல்வேறு பணக்காரர்களின் […]

உலகின் மூன்றாவது பெரிய பணக்காரரான கெளதம் அதானியின் சொத்து மதிப்பு சமீபத்தில் உயர்ந்துள்ளது.
அதாவது அமேசான் தலைவர் ஜெஃப் பெசோஸின் நிகர சொத்து மதிப்பை அடைய 7 பில்லியன் டாலர்கள் மட்டுமே குறைவாக இருக்கிறார்.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலின் படி, அமெசானின் தலைவ௫ம் நிர்வாக அதிகாரியுமான பெசோஸ் 152 பில்லியன் நிகர மதிப்பைக் கொண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே சமயம் அதானி 145 பில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பில் 3வது இடத்தில் உள்ளார்.
பல்வேறு பணக்காரர்களின் பட்டியல்களின்படி நிகர மதிப்பில் வித்தியாசம் இருந்தாலும், அதானிக்கும் பெசோஸுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு இல்லை. இது குறித்து ஃபோர்ப்ஸ் தனது பட்டியலில் அதானியின் நிகர மதிப்பு 151.5 பில்லியன் டாலராகவும் பெசோஸின் சொத்து மதிப்பு 151.9 பில்லியன் டாலராக இருப்பதாகவும் அறிவித்தது. ப்ளூம்பெர்க் பட்டியலில் 92.2 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி 9வது இடத்தைப் பிடித்துள்ளார். அதே சமயம் ஃபோர்ப்ஸ் பட்டியலில் 95.2 பில்லியன் டாலர்களுடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu