அதானி வழக்கில் இறுதி அறிக்கை வெளியிட மேலும் 15 நாட்கள் அவகாசம் - செபி

August 14, 2023

அதானி குழுமம் மீது நிதி மோசடி தொடர்பான குற்றங்களை ஹிண்டன்பர்க் அறிக்கை அடுக்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய தேசிய சந்தை கட்டுப்பாடு, பத்திரம் மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி, இன்று இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக இருந்தது. தற்போது, இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும், இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் தர வேண்டியும், செபி கோரி உள்ளது. அதானி குழுமம் […]

அதானி குழுமம் மீது நிதி மோசடி தொடர்பான குற்றங்களை ஹிண்டன்பர்க் அறிக்கை அடுக்கியது. இது தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்திய தேசிய சந்தை கட்டுப்பாடு, பத்திரம் மற்றும் பரிவர்த்தனை வாரியம் - செபி, இன்று இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதாக இருந்தது. தற்போது, இந்த வழக்கில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளதாகவும், இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க மேலும் 15 நாட்கள் அவகாசம் தர வேண்டியும், செபி கோரி உள்ளது.

அதானி குழுமம் மேற்கொண்ட 24 பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கிடமாக வழக்கு விசாரணையில் இடம் பெற்று இருந்தது. அவற்றில் 17 பரிவர்த்தனைகள் தொடர்பான விசாரணை நிறைவடைந்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 7 பரிவர்த்தனைகளில் 4 பரிவர்த்தனைகள், தெளிவாக உள்ளதாக அறிவித்துள்ளது. எனவே, எஞ்சியுள்ள பரிவர்த்தனைகள் தொடர்பான இறுதி அறிக்கைகளை சமர்ப்பிக்க 15 நாட்கள் கூடுதல் அவகாசம் கோரியுள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கான இறுதி அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 3% வரை சரிந்து வர்த்தகமாகின. இந்த நிலையில் செபி மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu