2 நாட்களில் 60 பேர் மரணம் - இமாச்சலில் தொடரும் மழை எச்சரிக்கை

August 16, 2023

வட இந்திய மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில், மேக வெடிப்பு ஏற்பட்டு கடுமையான மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் இமாச்சல பிரதேசத்தில் 60 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு 10000 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் […]

வட இந்திய மாநிலங்களான இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றில், மேக வெடிப்பு ஏற்பட்டு கடுமையான மழை பொழிந்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களில் மட்டும் இமாச்சல பிரதேசத்தில் 60 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன், மாநிலத்தில் ஏற்பட்ட சேதத்தின் மொத்த மதிப்பு 10000 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைப்பு செய்வதற்கு ஓராண்டு காலம் தேவைப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் மேலும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த 2 தினங்களுக்கும், உத்தரகாண்டில் அடுத்த 4 தினங்களுக்கும் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. கடுமையான வெள்ளத்தில் கட்டிடங்கள் அடித்து செல்லப்படும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்துள்ள நிலையில், பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் ராணுவத்தினர் மீட்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu