ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் 8278 கோடி முதலீடு செய்ய உள்ளதாக கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி அறிவித்துள்ளது. நிறுவனத்தின் இந்த முதலீடு கிட்டத்தட்ட 1% பங்குகளாக மாற்றப்பட உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சில்லறை வணிக நிறுவனமாக ரிலையன்ஸ் ரீடைல் உள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு, தன் பங்குகளை விற்றதன் மூலம், 47265 கோடி நிதியை ரிலையன்ஸ் ரீடைல் திரட்டியது, தொடர்ச்சியாக, பல்வேறு முதலீட்டு நிறுவனங்கள் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடுகளை குவித்து வருகின்றன. அந்த வகையில், கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டியின் முதலீடு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.