ராணுவ உபகரணங்கள் உள்ளிட்ட மூலதன திட்டங்களுக்கு மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் தலைமையில் பாதுகாப்பு துறைக்கான கையகப்படுத்தல் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ராணுவ கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கான ரூபாய் 7800 கோடி மூலதன திட்டங்களுக்காக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் எம் ஐ 17பி5 ஹெலிகாப்டரில் பயன்படுத்துவதற்கான மின்னணு உபகரணங்களையும், இந்திய தரைபடிக்கு தேவையான தானியங்கி இயந்திரங்கள் வாங்கவும், குறைந்த எடை கொண்ட இயந்திரத் துப்பாக்கிகள், லேப்டாப்கள், டேப்லெட் வாங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.