நாளை கேரளா உள்ளிட்ட ஏழு சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
கேரளாவின் புதிப்பள்ளி தொகுதி, திரிபுராவில் இரண்டு தொகுதி,ஜார்கண்ட், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஏழு தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் உத்தரபிரதேசத்தின் கோசி தொகுதி எம்.எல்.ஏ தாராசிங் அவரது பதவியை ராஜினாமா செய்ததால் இந்த இடம் காலியானது. அதேபோல் கேரளாவில் உம்மன்சாண்டி மறைவின் காரணமாக புதுபள்ளி தொகுதி காலியானது. மீதமுள்ள இடங்களில் உறுப்பினர்கள் மறைவினால் மற்ற இடங்களிலும் இடைத்தேர்தல் நாளை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செப்டம்பர் எட்டாம் தேதி நடைபெற இருக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளை காலை 7 மணிக்கு தொடங்கி எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது.