ஹோண்டா நிறுவனத்தின் புதிய வாகனம் 'எலிவேட்' வெளியீடு

September 4, 2023

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், புதிதாக எஸ்யூவி வாகனம் ஒன்றை வெளியிட்டுள்ளது. எலிவேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், இந்திய சந்தையில் 10.99 லட்சம் முதல் 15.9 லட்சம் வரை விற்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்த வாகனத்தின் தானியங்கி ரகங்கள் 13.2 லட்சம் முதல் 15.99 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 4 மீட்டர் நீளமுடையதாக இந்த வாகனம் சொல்லப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர் முதல் […]

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம், புதிதாக எஸ்யூவி வாகனம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எலிவேட் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், இந்திய சந்தையில் 10.99 லட்சம் முதல் 15.9 லட்சம் வரை விற்கப்பட உள்ளது. குறிப்பாக, இந்த வாகனத்தின் தானியங்கி ரகங்கள் 13.2 லட்சம் முதல் 15.99 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றன. சுமார் 4 மீட்டர் நீளமுடையதாக இந்த வாகனம் சொல்லப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு லிட்டருக்கு 15.31 கிலோமீட்டர் முதல் 16.92 கிலோமீட்டர் வரை மைலேஜ் கிடைக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது, ஹூண்டாய் நிறுவனத்தின் கிரீட்டா, மாருதி சுசுகியின் கிரான்ட் விட்டாரா, கியா செல்டோஸ், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைசர் ஆகிய வாகனங்களுடன் போட்டியிட உள்ளது. எஸ்யூவி வாகனப் பிரிவில், ஹோண்டா நிறுவனம் சார்பாக எந்த வாகனமும் இல்லாமல் இருந்தது. அந்த வெற்றிடத்தை எலிவேட் நீக்கி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu