கிம் ஜாங் உன் ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்க புதினை சந்திக்கிறார்

September 5, 2023

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வந்துள்ளது. வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளார். அவர் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்காக வடகொரிய அதிபர் கிம் பியோங்யாங்கில் இருந்து ரயிலில் ரஷியாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்வார். […]

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்க இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளதாக தகவல் வந்துள்ளது.

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த மாதம் ரஷியா செல்லவுள்ளார். அவர் அதிபர் விளாடிமிர் புடினை சந்தித்து உக்ரைன் போருக்கு ஆயுதங்களை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதற்காக வடகொரிய அதிபர் கிம் பியோங்யாங்கில் இருந்து ரயிலில் ரஷியாவின் பசிபிக் கடற்கரையில் உள்ள விளாடிவோஸ்டாக் வரை பயணம் செய்வார். அங்கு அவர் புடினை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. உக்ரைன் -ரஷியா இடையே போர் தொடர்ந்து நீடித்தால், வட கொரியா ரஷ்யாவுக்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கும் என்று அமெரிக்கா முன்னதாக எச்சரித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu