தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை - மா.சுப்பிரமணியன்

September 17, 2022

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் உள்ள மருந்து கிடங்கை ஆய்வு செய்தோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை. தமிழகத்திற்கு […]

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் மருந்து தட்டுப்பாடு உள்ளதாக பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு வாரங்களில் 5 அல்லது 6 மருத்துவமனைகளில் உள்ள மருந்து கிடங்கை ஆய்வு செய்தோம். எந்த மருத்துவமனையிலும் மருந்து தட்டுப்பாடு என்பது இல்லை.

தமிழகத்திற்கு தேவையான அத்தியாவசிய 327 மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. இதற்கு முன்பு வரையிலும் 32 இடத்தில் மட்டும்தான் மருந்து கிடங்கு இருந்தது. தற்போது நான்கு மருத்துவக் கிடங்குகள் புதிதாக அமைக்கப்பட்டு வருகிறது. 'Iv fluids' மருந்துக்கு சில இடங்களில் தட்டுப்பாடு இருந்தது உண்மைதான். இதற்கு காரணம் உக்ரைன் போர் இருந்ததால் சில இடங்களில் இறக்குமதி செய்வதற்கு காலதாமதமனது.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கு மருந்துகள் தட்டுப்பாடு இருந்தது என்ற செய்தியும் வெளியாகி வருகிறது. அந்தத் திட்டத்திற்கு என்று தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்ட மருந்து கிடங்கில் 3 அல்லது 4 மாத காலத்திற்கான இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாடு இருக்கிறது என்று செய்தி வெளியிட வேண்டும் என்றால் மருந்து கிடங்கை வந்து நேரடியாக ஆய்வு மேற்கொள்ள அனுமதி வழங்குகிறோம். பொது மக்கள் அப்படி மருந்து தட்டுப்பாடு இருந்தால் 104 புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று அமைச்சர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu