அதிபர் ஜோ பைடன் ஜி20 மாநாட்டில் பங்கேற்க உள்ளார் - வெள்ளை மாளிகை தகவல்

September 6, 2023

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய தலைநகர் புது டெல்லியில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா அதிபர், சீன அதிபர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களை இந்தியா அழைத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க […]

டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது. இந்த தகவலை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்திய தலைநகர் புது டெல்லியில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு வரும் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா அதிபர், சீன அதிபர் உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்களை இந்தியா அழைத்துள்ளது. இதை ஏற்று பல்வேறு நாட்டின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க சம்மதித்துள்ளனர். இந்நிலையில், ஜோ பைடன் இந்தியா வருவதாக கூறப்பட்ட நிலையில், அவர் ஜி20 மாநாட்டில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதற்கு காரணம் அவரது மனைவி ஜில் வைடனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதியானதுதான். இதனால் ஜோ பைடன் மாநாட்டில் கலந்து கொள்வது சந்தேகம் என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், வெள்ளை மாளிகை அளித்த செய்தி குறிப்பில், அதிபர் ஜோ பைடனுக்கு இரு தினங்களாக கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதில் நெகட்டிவ் என வந்துள்ளது இதையடுத்து அவர் திட்டமிட்டபடி ஜி 20 மாநாட்டில் கலந்து கொள்வார். அதோடு, பிரதமர் மோடியை சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu