டெல்லியில் 10 ஆம் தேதி வரை ரயில் சேவை மாற்றம்.

September 7, 2023

டெல்லியில் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் 10ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. அங்கு பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு விமானப்படை, போர் விமானங்கள் மூலமாகவும் கண்காணிக்கும் பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து டெல்லியில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை 8 […]

டெல்லியில் ஜி 20 மாநாட்டை முன்னிட்டு மெட்ரோ ரயில் சேவை நேரம் 10ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெற இருக்கிறது. அங்கு பல நாட்டு தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் தலைநகரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு விமானப்படை, போர் விமானங்கள் மூலமாகவும் கண்காணிக்கும் பணி பலப்படுத்தப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து டெல்லியில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை நேரத்தை 8 ஆம் தேதி முதல் 10ம் தேதி வரை மாற்றி உத்தரவிட்டுள்ளது.அதன்படி அதிகாலை 4 மணி முதல் ரயில் இயங்க தொடங்கும். அங்கு காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களும் அரை மணி நேர இடைவேளையில் ரயில்கள் இயக்கப்படும். மேலும் 6:00 மணிக்கு பிறகு வழக்கமான அட்டவணை பின்பற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளது. வழக்கமாக இயற்றப்படும் சேவை ஜி-20 மாநாட்டிற்காக அதிகாலை 4 மணிக்கு இயக்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu