சி 295 விமானங்கள் - இந்திய விமானப்படையிடம் ஏர்பஸ் ஒப்படைப்பு

September 14, 2023

ஏர்பஸ் நிறுவனத்தின் சி 295 விமானங்களை, இந்திய விமான படைக்கு வாங்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, முதல் சி 295 ஏர்பஸ் விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுமார் 21935 கோடி ரூபாய் மதிப்பில், சி 295 விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக, 16 விமானங்கள், ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அடுத்ததாக, 40 சி 295 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் […]

ஏர்பஸ் நிறுவனத்தின் சி 295 விமானங்களை, இந்திய விமான படைக்கு வாங்க, கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் படி, முதல் சி 295 ஏர்பஸ் விமானம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுமார் 21935 கோடி ரூபாய் மதிப்பில், சி 295 விமானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. முதற்கட்டமாக, 16 விமானங்கள், ஸ்பெயினில் உள்ள ஏர்பஸ் உற்பத்தி மையத்தில் தயாரிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும். அடுத்ததாக, 40 சி 295 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்த உற்பத்தி பணியில் ஈடுபட உள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம், இந்தியாவில் தயாரிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஸ்பெயினில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமானப்படை தளபதி வி ஆர் சௌத்ரியிடம், ஏர்பஸ் தயாரித்த முதல் சி 295 விமானம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விமானம், இந்திய விமானப்படையில் ஏற்கனவே உள்ள கனரக விமானங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு கூட செல்லும் என கூறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் 50 முதல் 71 வீரர்கள் மற்றும் ஆயுதங்களை எடுத்துச் செல்லலாம் எனவும், பேரிடர் மீட்பு மற்றும் கடல் கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு இந்த விமானங்களை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu