வாட்ஸ் அப் செயலியில் சேனல் அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட 150 நாடுகளில் இந்த அம்சம் வெளிவந்துள்ளது.
வாட்ஸ் அப் செயலியில் புதிதாக அப்டேட்ஸ் என்ற டேப் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ், ஸ்டேட்டஸ் மற்றும் சேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பகுதியில், பிரபலமாக உள்ள சேனல்கள் மற்றும் தனிப்பட்ட நபரின் விருப்பத்துக்கு தொடர்புடைய சேனல்கள் காட்டப்படும். இது சாட் விண்டோவில் இருந்து தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஒருவரின் தொலைபேசி எண் மற்றொருவருக்கு காட்டப்படாது. சேனல் வைத்திருக்கும் நபரின் ப்ரோபைல் போட்டோ மற்றும் தொலைபேசி எண் பாலோயர்களுக்கு காட்டப்படாது. யார் யாரை பாலோயராக இணைக்க வேண்டும் என்பதை சேனல் அட்மின் முடிவு செய்யலாம். சரியாக 30 நாட்கள் வரை சேனல் விவரங்கள் வாட்ஸ் அப் சர்வரில் சேமிக்கப்பட்டிருக்கும். அதன் பிறகு, அவை தாமாக அழிக்கப்பட்டு விடும். நிறுவனங்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேனலை தற்போது தொடங்கியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.