மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெறுவதில் மேல்முறையீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தமிழக அரசு சிறப்பு முகாம் நடத்த பரிசீலனை செய்து வருகிறது.
தமிழக அரசின் மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெற 1.06 கோடி மக்கள் தகுதியானவர்களாக அடையாளம் காணப்பட்டதில் 57 லட்சம் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. நிராகரிக்கப்பட்ட காரணங்கள் அவரவர் செல்போன்களுக்கு செய்தியாக வரும் என அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பாலானவருக்கு குறுஞ்செய்தி கிடைக்காத நிலையில் அவர்கள் மேல்முறையீடு செய்வதில் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இதனால் விண்ணப்பதாரர்கள் பலர் பணம் கிடைக்காமல் போய்விடுமோ என்று நினைத்தனர். மேலும் இதற்கு வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்க தெரிவித்திருந்த நிலையில் உடனுக்குடன் விண்ணப்பநிலையை அறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் இணைய சேவை மையங்களில் மேல்முறையீடு செய்யலாம் என கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு முகாம்களை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.