நிலவில் இந்தியச் சின்னம் தெளிவாக பதியவில்லை - தென் துருவ மேற்பரப்பு பற்றி புதிய தகவல் - இஸ்ரோ

September 25, 2023

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் பகுதியாக, நிலவில் சுற்றி வந்த பிரக்யான் ரோவர் சக்கரத்தில், இந்திய தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நிலவின் மேற்பரப்பில் தெளிவாக பதியவில்லை. இது நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மணல் பரப்பின் தன்மை குறித்து அறிவதற்கு மிக முக்கிய தகவல்களைத் தந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ தலைவர் சோம்நாத், “நிலவின் மணல் பகுதி கட்டித்தன்மையுடன் உள்ளது. அதனால்தான் சக்கரத்தில் உள்ள தேசிய சின்னம் தெளிவாகப் பதியவில்லை. மணல் […]

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டத்தின் பகுதியாக, நிலவில் சுற்றி வந்த பிரக்யான் ரோவர் சக்கரத்தில், இந்திய தேசிய சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், அது நிலவின் மேற்பரப்பில் தெளிவாக பதியவில்லை. இது நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள மணல் பரப்பின் தன்மை குறித்து அறிவதற்கு மிக முக்கிய தகவல்களைத் தந்துள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தலைவர் சோம்நாத், “நிலவின் மணல் பகுதி கட்டித்தன்மையுடன் உள்ளது. அதனால்தான் சக்கரத்தில் உள்ள தேசிய சின்னம் தெளிவாகப் பதியவில்லை. மணல் பரப்பை கட்டியாக்கும் பொருள் தென் துருவப் பகுதியில் உள்ளதை இது உறுதி செய்துள்ளது. எதிர்காலத்தில் நிலவில் குடியேற்றங்களை அமைப்பது குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட, இந்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்” என இது தொடர்பாக கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu