மணிப்பூர் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு

September 28, 2023

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட உள்ளது. மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் நீடித்து வந்த நிலையில் பெரும் கலவரமாக வெடித்தது.இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு மேலும் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு வந்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பல பகுதிகள் பதற்றம் நிறைந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு ஆறு மாதங்களுக்கு […]

வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் ஆயுதப்படை சிறப்பு சட்டம் மணிப்பூரில் அமல்படுத்தப்பட உள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கு இடையேயான மோதல் நீடித்து வந்த நிலையில் பெரும் கலவரமாக வெடித்தது.இதில் 180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இங்கு மேலும் இரண்டு மாணவர்கள் கொலை செய்யப்பட்டு வந்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து நடைபெறும் வன்முறை சம்பவங்களால் மணிப்பூரில் பல பகுதிகள் பதற்றம் நிறைந்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு ஆறு மாதங்களுக்கு ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் அமல்படுத்தப்படும் என மாநில உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டம் என்பது பதற்றமான பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆயுதப்படை மற்றும் மாநில படை துணை ராணுவப்படைகளுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் சட்டமாகும். இனி மாநிலத்தின் நடைபெறும் விவகாரங்கள் தொடர்பாக 19 நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளில் ஆளுனரே நேரடி உத்தரவுகளை இடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu