நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசனை : பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு

September 21, 2022

புதிய ராணுவ தளபதி குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசனை நடத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதிய இராணுவத் தளபதியை நியமிப்பது குறித்து குற்றவாளியான நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசித்ததாக செய்தி வெளியானது. அதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றத்தில் ஷேபாஸ் ஷெரீப்பிற்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் அவரை விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நவாப் ஷெரீப் லா௯ரில் உள்ள லக்பத் சிறையில் அல்-அஜிசியா ஊழல் வழக்கில் […]

புதிய ராணுவ தளபதி குறித்து நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசனை நடத்தியதற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மீது தேசத் துரோக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் புதிய இராணுவத் தளபதியை நியமிப்பது குறித்து குற்றவாளியான நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசித்ததாக செய்தி வெளியானது. அதையடுத்து பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டமன்றத்தில் ஷேபாஸ் ஷெரீப்பிற்கு எதிராக தேசத் துரோக குற்றச்சாட்டின் கீழ் அவரை விசாரிக்குமாறு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நவாப் ஷெரீப் லா௯ரில் உள்ள லக்பத் சிறையில் அல்-அஜிசியா ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்தார். பின்னர் ஜாமீனில் விடுதலை பெற்று நவம்பர் 2019 முதல் லண்டனில் வசித்து வருகிறார். தற்போதைய ராணுவ ஜெனரலான கமர் ஜாவேத் பஜ்வா ஓய்வு பெற உள்ளார். அதாவது எலிசபெத் ராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் பிரதமர் லண்டன் சென்றிருந்தார். அச்சமயம் அவர் புதிய ராணுவத் தளபதியை நியமிப்பது குறித்து பாகிஸ்தானில் இருந்து வெளியேறி லண்டனில் வசிக்கும் குற்றவாளியான நவாஸ் ஷெரீப்பிடம் ஆலோசனை நடத்தினார். இது குறித்து பஞ்சாப் நாடாளுமன்ற அமைச்சர் பஷரத் ராஜா, அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் ஷேபாஸ் ஷரிப் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தார். அம்மனுவில், சம்பந்தமில்லாத நபர்களுடன் ராணுவ விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது இராணுவத்தை அவமதிப்பது போன்ற செயலாகும். மேலும் இதனை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியி௫ந்தார். அதேபோல் எதிர்கட்சி தலைவரான இம்ரான் கான், அடுத்த ராணுவத் தளபதியை நியமிக்க நவாஸ் ஷெரீப்பிடம் ஷேபாஸ் ஷெரீப் ஆலோசனை நடத்தும் படங்களைப் பகிர்ந்து இதுபோன்ற முடிவுகளை குற்றவாளிகளை ஆலோசித்து எடுப்பது நாட்டிற்கு பெரிய அவமானம் என்று விமர்சித்தார். அத்துடன் இது அதிகாரத்தை மீறும் செயல் என்றும் கூறினார்.

 

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu