அஞ்சல் துறையில் ஒவ்வொரு காலாண்டிலும் சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த டிசம்பர் மாத காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய நிதி வெளியிட்டுள்ளது. அஞ்சல் அலுவலக சிறுசேமிப்பு திட்டங்களுக்காக வட்டி விகிதம் ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றம் பெற்று புதிதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் டிசம்பர் காலாண்டுக்கான வட்டி விகிதம் மாற்றப்பட்டு நேற்று மத்திய அமைச்சகம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 5 ஆண்டுக்கான தொடர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சேமிப்பு வைப்புத் தொகை வட்டி 4 சதவீதமாகவும், ஓராண்டு வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 6.9% ஆகவும் அதே நிலையில் தொடர்கிறது. மேலும் 2 மற்றும் 3 ஆண்டு வாய்ப்புக்காக வட்டி விகிதம் 7 சதவீதமாகவும், ஐந்து ஆண்டுக்கான வட்டி விகிதம் 7.5 சதவீதமாகவும் உள்ளது. மூத்த குடிமக்கள் சேமிப்பு வட்டி வீதம் 8.2% ஆகவும், மாதாந்திர வருவாய் கணக்குத் திட்ட வட்டி விகிதம் 7.4 சதவீதமாகவும், பொது வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 7.6% ஆக உள்ளது.