வில்வித்தை போட்டிக்கான இறுதிச் சுற்றுக்கு இந்திய வீரர்கள் 3 பேர் தேர்வு

October 3, 2023

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் பிரிவில் ஜோதி சுரேகா கஜகஸ்தான் வீராங்கனையை 147- 144 என்ற கணக்கில் வென்றார். அதேபோல் இந்திய வீராங்கனை அதிதி தாய்லாந்து வீராங்கனையை 149-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். ஜோதி சுரேகா 149-146 என்ற கணக்கில் அதிதியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதிதி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். இதேபோல் ஆண்கள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் வர்மா கஜகஸ்தான் வீரருடன் போட்டியிட்டு 147-147 என்ற […]

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய பெண்கள் பிரிவில் ஜோதி சுரேகா கஜகஸ்தான் வீராங்கனையை 147- 144 என்ற கணக்கில் வென்றார். அதேபோல் இந்திய வீராங்கனை அதிதி தாய்லாந்து வீராங்கனையை 149-143 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். ஜோதி சுரேகா 149-146 என்ற கணக்கில் அதிதியை வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அதிதி வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் விளையாட உள்ளார். இதேபோல் ஆண்கள் பிரிவில் இந்தியாவை சேர்ந்த அபிஷேக் வர்மா கஜகஸ்தான் வீரருடன் போட்டியிட்டு 147-147 என்ற புள்ளி கணக்கில் விளையாட்டை சமன் செய்தார். இதனை அடுத்து சூட்டப் முறையில் அபிஷேக் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அதன் பின் அபிஷேக் தென்கொரிய வீரரை 147-145 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் ஓஜஸ் பிரவீன் 150- 142 என கஜகஸ்தான் வீரரை தோற்கடித்து, பின்னர் 150-146 என்ற புள்ளி கணக்கில் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu