இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது -1,100 பேர் பலி

October 9, 2023

இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலி எண்ணிக்கை இதுவரை 1113 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஏழாம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5000 க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பு ஏவியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் கடல் வழி, வான்வழி, தரைவழி வாயிலாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அங்கே இஸ்ரேலின் தெற்கு […]

இஸ்ரேல் - ஹமாஸ் போர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலி எண்ணிக்கை இதுவரை 1113 ஆக அதிகரித்துள்ளது.இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு கடந்த ஏழாம் தேதி திடீர் தாக்குதல் நடத்தியது. காசா முனையில் இருந்து இஸ்ரேல் மீது சுமார் 5000 க்கும் மேற்பட்ட ராக்கெட் ஏவுகணைகளை ஹமாஸ் அமைப்பு ஏவியது. இந்த தாக்குதலை தொடர்ந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் கடல் வழி, வான்வழி, தரைவழி வாயிலாக இஸ்ரேலுக்குள் நுழைந்தனர். அங்கே இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள நகரங்களுக்குள் நுழைந்து அங்குள்ள மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றனர். இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நேரலையில் ஒளிபரப்பினர். அதோடு இந்த பயங்கரவாதிகள் இஸ்ரேலிய இராணுவ தளத்தையும் கைப்பற்றியுள்ளனர். இந்தமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகள், பெண்கள், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் என பலரையும் பிணை கைதிகளாக சிறை பிடித்து காசா முனைக்கு கொண்டு சென்றனர்.
இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 700 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் 400-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக இஸ்ரேல் கூறியுள்ளது. இந்த போர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் பலி எண்ணிக்கை இதுவரை 1113 ஆக அதிகரித்துள்ளது.
ஹமாஸ் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவுக்கான மின்சாரம் எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தியுள்ளது. காசா முனை எல்லையில் எல்லையில் இஸ்ரேல் ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது. தற்போது காசாவின் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் மீது வான்வழி தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu