ஆண்டுக்கு இரு முறை பொதுத் தேர்வு கட்டாயம் அல்ல - மத்திய கல்வி மந்திரி

October 9, 2023

வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வை இரு முறை நடத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதலாம் என கூறியிருந்தது. அதன்படி தேர்வுக்கு சிறப்பாக தயாராக போதிய கால அவகாசம் மாணவர்களுக்கு அளிக்கவும், இதில் எந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணோ அதை தக்க வைத்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. […]

வருகின்ற 2024 ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்வை இரு முறை நடத்தும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம் புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டிருந்தது. அதில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பொது தேர்வுகளை ஆண்டுக்கு இருமுறை எழுதலாம் என கூறியிருந்தது. அதன்படி தேர்வுக்கு சிறப்பாக தயாராக போதிய கால அவகாசம் மாணவர்களுக்கு அளிக்கவும், இதில் எந்த தேர்வுகளில் அதிக மதிப்பெண்ணோ அதை தக்க வைத்துக் கொள்ளவும் வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. இதை பற்றி மத்திய கல்வி மந்திரி கூறுகையில், மாணவர்கள் மத்தியில் இருமுறை பொதுத்தேர்வு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது 2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. இதில் ஒருமுறை மட்டும் தேர்வு எழுதினால் ஏற்படும் மன அழுத்தத்தை தவிர்க்க இந்த முறை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஜினியரிங் படிப்பிற்கான ஜே. ஈ. ஈ நுழைவுத் தேர்வு ஆண்டிற்கு இருமுறை நடத்துவதை போல இதை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாணவர்கள் முதல் பொதுத் தேர்வில் தங்கள் மதிப்பெண் சிறந்ததாக இருப்பதாக கருதினால் இரண்டாவது தேர்வு எழுத கட்டாயம் அல்ல. இருமுறையும் தேர்வு எழுதுவது மாணவர்களின் விருப்பத்தை பொறுத்தது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu