புதிய வரி நிலுவை தொகை சமாதான திட்டம் அறிவிப்பு

October 10, 2023

நிலுவையில் உள்ள வரி தொகையை வசூலிக்க புதிய வரி திட்டம் சட்டப்பேரவையில் 101 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை மற்றும் மேல்முறையீடு குறித்து தீர்வு காணும் நோக்கில் ' புதிய வரி நிலுவை தொகை சமாதான திட்டம் ' பற்றிய அறிவிப்பு 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகை வழக்குகள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை […]

நிலுவையில் உள்ள வரி தொகையை வசூலிக்க புதிய வரி திட்டம் சட்டப்பேரவையில் 101 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை மற்றும் மேல்முறையீடு குறித்து தீர்வு காணும் நோக்கில் ' புதிய வரி நிலுவை தொகை சமாதான திட்டம் ' பற்றிய அறிவிப்பு 110 விதியின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது.
வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொகை வழக்குகள் அதிக எண்ணிக்கையில் நிலுவையில் உள்ளதால் வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, வணிகர்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு பிரச்சனைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை வைத்ததை அடுத்து தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் வரி மதிப்பீடு ஆண்டில் ரூபாய் 50 ஆயிரத்துக்கு குறைவாக வரி, வட்டி அபராத தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு வரியை முழுவதுமாக தள்ளுபடி செய்வது இதுவே முதன் முறையாகும் . இதனால் அரசிற்கு ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 வணிகர்கள் முழுமையாக பலனடைவார்கள். இந்த திட்டம் வரும் 16 ஆம் நடைமுறைக்கு வருகிறது. இது பின்னர் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu