டிசிஎஸ் காலாண்டு முடிவுகள் வெளியீடு - நிகர லாபம் 8.7% உயர்வு

October 12, 2023

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% உயர்ந்து, 11342 கோடி அளவில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 7.9% உயர்ந்து, 59692 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் இயக்க லாபம் 9.1% உயர்ந்து, 14483 கோடி […]

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான டிசிஎஸ் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டு முடிவுகளை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபம் 8.7% உயர்ந்து, 11342 கோடி அளவில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் இயக்க வருவாய் 7.9% உயர்ந்து, 59692 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் இயக்க லாபம் 9.1% உயர்ந்து, 14483 கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியான பிறகு, இன்றைய வர்த்தகத்தில் டிசிஎஸ் நிறுவனம் 1% வரை சரிந்து வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu