அதானி போர்ட்ஸ் - மேற்கு வங்கத்தில் 3.1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய துறைமுகத்தை அமைக்கிறது

September 22, 2022

மேற்கு வங்கத்தில், தாஜ்பூர் துறைமுகத்தை அமைக்க கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்பூரில், சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், துறைமுகம் கட்டமைக்கப்பட உள்ளது. மொத்தம் உள்ள 250 பில்லியன் ரூபாய் மதிப்பில், 150 பில்லியன் ரூபாய் நேரடி துறைமுக கட்டமைப்பிற்கும், இதர பணம், துறைமுகம் சார்ந்த கட்டமைப்புகளுக்கும் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே, அதானி குழுமத்திற்குச் சொந்தமாக, இந்தியாவின் 30% உள்நாட்டு துறைமுகங்கள் இயங்கி வருகின்றன. […]

மேற்கு வங்கத்தில், தாஜ்பூர் துறைமுகத்தை அமைக்க கௌதம் அதானியின் அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தாஜ்பூரில், சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில், துறைமுகம் கட்டமைக்கப்பட உள்ளது. மொத்தம் உள்ள 250 பில்லியன் ரூபாய் மதிப்பில், 150 பில்லியன் ரூபாய் நேரடி துறைமுக கட்டமைப்பிற்கும், இதர பணம், துறைமுகம் சார்ந்த கட்டமைப்புகளுக்கும் செலவிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அதானி குழுமத்திற்குச் சொந்தமாக, இந்தியாவின் 30% உள்நாட்டு துறைமுகங்கள் இயங்கி வருகின்றன. மேலும், இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் மற்றும் இலங்கையின் போர்ட் டெர்மினல் துறைமுகம் ஆகியவையும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், தற்போதைய தாஜ்பூர் துறைமுகத் திட்டமும் அதானி குழுமத்திற்கு கையெழுத்தாகி உள்ளதால், அதானி போர்ட்ஸ் நிறுவனம் மேலும் வலுவடைந்துள்ளது. அத்துடன், மேற்கு வங்கத்தில் உள்ள ஹால்தியா துறைமுகத்தை நவீனப்படுத்தும் திட்டத்திலும், அதானி போர்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தாஜ்பூர் துறைமுகத் திட்டத்தின் மூலம், 25,000 நேரடி வேலை வாய்ப்புகளும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மறைமுக வேலை வாய்ப்புகளும் உருவாகும் என்று மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த துறைமுகம் கொல்கத்தாவில் இருந்து 105 மைல்கள் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், அங்கு துறைமுக வர்த்தகம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu