பழைய ராயல் என்ஃபீல்டு வாகனங்களை மீண்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்துக்கே விற்கும் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் முறையாக இத்தகைய திட்டத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் களம் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
OTO கேப்பிட்டல் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்து, Assured Buyback Program என்ற திட்டத்தை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு வாகனம் வாங்குவதற்கு மிகக் குறைந்த தவணை முறை கட்டணம் கொடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 3 ஆண்டுகளுக்கு தவணை காலம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், தவணை கட்டணம் 45% குறைவாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. காலம் நிறைவடைந்த பிறகு, 77% வரையிலான தொகைக்கு, வாகனத்தை மீண்டும் நிறுவனத்திடமே விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி ராயல் என்ஃபீல்டு பிரியர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.














