இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.வரும் அக்டோபர் 21ஆம் தேதி, ககன்யான் திட்டத்திற்கான முதல் பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இதற்கான உயர் மட்ட ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து இஸ்ரோவின் எதிர்கால திட்டங்கள் குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி, 2035 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவுக்கு பிரத்தியேகமான விண்வெளி நிலையம் அமைக்கப்பட வேண்டும். அடுத்ததாக, 2040 ஆம் ஆண்டில், இந்தியர் ஒருவரை நிலவுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இவை தவிர, வெள்ளி கிரகத்தை சுற்றி வந்து ஆய்வு செய்யும் விண்கல திட்டம் மற்றும் செவ்வாய் கிரகத்தில் லேண்டர் தரையிறக்கும் திட்டம் ஆகியவற்றிலும் பணியாற்ற இஸ்ரோவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.














