அல்ட்ரா டெக் சிமெண்ட் நிறுவனம், தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் லாபம் 69% உயர்ந்து 1281 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயத்தில், நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 15% உயர்வை பதிவு செய்துள்ளது. கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் வருவாய் 16012 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த செப்டம்பர் மாத இறுதியில், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 2498 கோடி ரூபாய் ஆகும். அத்துடன், நிறுவனத்தின் தயாரிப்புகளில் மொத்தமாக 16% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த காலாண்டில், சிமெண்ட் தேவை நாட்டில் அதிகரித்து காணப்பட்டதால் இந்த உயர்வு எட்டப்பட்டுள்ளதாக அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.