காசாவில் நூற்றுக்கணக்கான பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு செய்துள்ளனர்.இஸ்ரேல் ராணுவம் காசா இடையே கடந்த இரண்டு வாரமாக போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,, இஸ்ரேல் ராணுவம் தரை வான் மற்றும் கடல் வழியான தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளது. தற்போது காசா எல்லையில் குண்டு மழை பொழிந்து வருகிறது. தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. தெற்கு இஸ்ரேலின் எல்லை அருகே காசாவை முற்றுகை இடும் வகையில் பீரங்கிகள் மற்றும் ராணுவ வீரர்களை ஏராளமான அளவில் குவித்துள்ளது. இதற்கிடையே, லெபனான் பகுதியில் இருந்து 9 ராக்கெட்டுகள் ஏவப்பட்டன. அதில் நான்கு ராக்கெட்டுகள் இடமறித்து அழிக்கப்பட்டன. மேலும் இஸ்ரேல் படைகளை நோக்கி பீரங்கிகளை அழிக்கும் ஏவுகணைகளும் ஏவப்பட்டுள்ளன. எனவே, லெபனான் பகுதியை நோக்கி இஸ்ரேல் படை பதிலடி கொடுத்தது. பீரங்கி தாக்குதல் பயன்படுத்தி ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு கட்டிடம் தாக்கப்பட்டது என இஸ்ரேல் ராணுவம் கூறியது.
இதற்கிடையே ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் ஆயுத மற்றும் நிதி உதவி வழங்கி வருகிறது என்று இஸ்ரேல் அமைச்சர் பேசியுள்ளார்.